எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டென்னிஸ் பிஷ்ஷர்கட்டுரைகள்

கை விட்டு விட வேண்டாம்

1952ல் பிளாரன்ஸ் சாட்விக், கலிபோர்னியா கடற்கரையிலிருந்து 26 மைல் தூரத்திலுள்ள கேற்றலினா தீவிற்கு நீந்திச் செல்ல முயற்சி செய்தாள். 15 மணி நேரம் கழித்து கடுமையான பனி மூட்டம் வந்து அவளது பார்வையை மறைத்தது. அதனால் அவள் திசையை சரியாக அறிய இயலாமல் நீந்துவதை கைவிட்டு விட்டாள். அவள் அடைய வேண்டிய இலக்குக்கு ஒருமைல் தூரம் மட்டும் இருக்கும் பொழுதுதான், அவள் அவளது முயற்சியை கைவிட்டிருந்ததை பின்னால் அறிந்து மிகவும் கவலையும் எரிச்சலும் அடைந்தாள்.

இரண்டு மாதங்கள் கழித்து, சாட்விக் மறுபடி இரண்டாவது முறையாக…

பனிப் பூக்கள்

15 வயதான வில்சன் பென்ட்லே, விளங்கிக் கொள்ள முடியாத பனித் துகள்களின் அழகினால் கவரப்பட்டான். அவனுடைய தாய் அவனுக்குக் கொடுத்த ஓர் பழைய மைக்கிராஸ்கோப்பினால் மிகவும் ஆவலுடன் அவற்றைப் பார்த்து நூற்றுக்கனக்கான சிறப்புமிக்க கலைச் சித்திரங்களை வரைபடமாக்கினான். ஆனால் அவற்றை தெளிவாக பார்க்கும் முன் மிகச் சீக்கிரத்தில் உருகிவிடும். பல ஆண்டுகளுக்குப் பின் 1885ம் ஆண்டு அவருக்கு ஓர் எண்ணம் உதித்தது காற்றுத் துருத்தியுடன் கூடிய ஓர் காமராவை மைக்கிராஸ்கோப்புடன் இணைந்து பலவித தோல்விகளுக்கு இடையே முயற்சித்து பனித்துகளின் முதல் புகைப் படத்தை எடுத்தார்.…

பரலோகத்தின் வாசல்கள்

இத்தாலி நாட்டின் பிளாரண்ஸ் பேப்டிஸ்டரி (Florence Baptistery) தேவாலயத்தின் கதவுகளில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை மிக நேர்த்தியாய் இத்தாலியக் கலைஞர் லாரண்ஸோ கைபர்டி (Lorenzo Ghiberti, 1378-1455) என்ற சிற்பி பல ஆண்டுகள் செலவழித்து செதுக்கியிருந்தார். அந்த வெண்கலப் படைப்பின் மகத்துவத்தைக் கண்ட மைக்கேல்ஏஞ்சலோ அவற்றை பலலோகத்தின் வாசல்கள் என்று அழைத்தார்.

அக்கதவுகள் வருகிறவர்களை, சுவிசேஷத்தைப் பிரதிபலித்து வரவேற்கும் ஓர் உன்னதக் கலைப் புதையலாகத் திகழ்கிறது. இயேசு கிறிஸ்து, “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்” (யோவான் 10: 9)…

தொடர்ச்சியாக பறந்து செல்வது

ஆலன் டெனன்ட் எழுதியுள்ள இறக்கையின் மேல் என்ற புத்தகத்தில், பிற பறவைகளைக் கொன்று தின்னும் இராஜாளி என்ற கழுகினம் இடம் பெயர்ந்து செல்லும் முறையைத் தொடர் பதிவு செய்வதற்காக, அவர் செய்த முயற்சிகளைப் பற்றி அவர் எழுதியுள்ளார். அழகு, வேகம், செயல்படும் திறனுடைய அப்பறவைகள், முற்காலத்தில் அரசர்கள், பிரபுக்கள் இவர்களுடைய வேட்டைத் தோழனாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1950களில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட D.D.T என்ற பூச்சிக் கொல்லி மருந்தினால், அவைகளின் இனப்பெருக்கத்திறன் பாதிக்கபட்டதால், அவை வெகுவேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அழிந்து…

அன்புத் தீவு

மிக்சிகனில் சகிநாவ் விரிகுடாவில் உள்ள கியுரான் ஏரியிலுள்ள மிகப்பெரிய தீவு அன்புத் தீவு ஆகும். அநேக ஆண்டுகளாக கடலில் பயணம் செய்பவர்கள் பத்திரமாக பயணம் செய்வதற்கான ஒரு கலங்கரை விளக்கையும் பாதுகாப்பான ஒரு துறைமுகத்தையும் உடையதாய் இருந்தது. “கடவுளுடைய அன்பினால் தான்” அந்தத் தீவு அந்த இடத்திலிருந்ததென்று, கடலில் பயணம் செய்தவர்கள் நம்பினதினால் அந்தத் தீவிற்கு அன்புத் தீவு என்று பெயர் வந்தது.

சில சமயங்களில் நமது வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை கடந்து வர வேண்டியதிருக்கும். அந்தக் கடல் பயணிகளைப் போல நமக்கும் வழிகாட்டுதலும்,…

உமது பிரசன்னத்தின் மகிழ்ச்சி

“மனித வாழ்வின் மிக முக்கிய முடிவு, தேவனை மகிமைப்படுத்தி அவரோடு என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பதே” என்று வெஸ்ட் மினிஸ்டர் நற்போதகம் கூறுகிறது. வேதாகமத்தின் அதிகமான பகுதிகள் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியுணர்வுடன் ஜீவனுள்ள தேவன் மீது ஆழமான அன்பு செலுத்தி அவரைப் பணிந்து கொள்வதைப் பற்றிக் கூறுகிறது. தேவனை நாம் கனப்படுத்தும் பொழுது நன்மையான எந்த ஈவிற்கும் மூலகாரணர் அவரே என்று அவரைப் போற்றுகிறோம்.
நாம், நமது உள்ளத்திலிருந்து தேவனைத் துதிக்கும் பொழுது, நாம் என்ன நோக்கத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டோமோ அதற்கான மகிழ்ச்சியின் உன்னத நிலைமைக்குக் கொண்டு…

நெருப்போடு விளையாடுதல்

நான் சிறுவனாக இருந்த பொழுது எனது தாயார் நெருப்போடு ஒரு போதும் விளையாடக் கூடாது என்று என்னை எச்சரித்தார். ஒரு நாள் நெருப்போடு விளையாண்டால் என்ன நேரிடும் என்று அறிய விரும்பினேன். சில காகிதங்களையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்ய முயன்றேன். இதயம் படபடக்க தரையிலே முழங்கால் படியிட்டு தீக்குச்சியைக் கொளுத்தி காகிதத்தைப் பற்றவைத்தேன்.
திடீரென்று என் தாயார் வருவதைப் பார்த்தேன். நான் செய்த செயலைக் குறித்து எனது தாயார் அறிந்து கொள்ளக் கூடாதென்று நெருப்புச் சுவாலையின் மேல் என் கால்களை வைத்து…

கைவிடப்பட்டதாக உணர்தல்

C.S. லூயிஸ், ஸ்குரு டேப் கடிதங்கள் என்ற அவரது புத்தகத்தில் ஒரு மூத்த பிசாசும், ஒரு இளைய பிசாசும் ஒரு கிறிஸ்துவனை விசுவாசத்திலிருந்து விழவைக்க எந்தமுறையில் சோதிக்கலாம் என்று பேசிக்கொண்ட கற்பனை உரையாடலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அந்த இரு பிசாசுகளும் அந்த விசுவாசிக்கு தேவன்மேல் இருந்த விசுவாசத்தை அழித்துவிட விரும்பின. “ஏமாற்றப்பட்டு விடாதே. இந்த அண்டசராசரத்தில் தேவனைப் பற்றிய அனைத்து அடையாளங்களும் மறைந்து விட்டதுபோல் காணப்பட்டாலும், தேவன் அவனை ஏன் கைவிட்டுவிட்டார் என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டுக்கொண்டாலும், தேவனுக்கு கீழ்ப்படிகிறவனாக அவன் இருந்தால் நாம்…